இஸ்ரேலின் காசா மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்து, சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல மரணங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பலியானவர்களின் பிணங்களை குடும்பத்தினர் எடுத்து செல்லும் போது ஏற்பட்ட அவலக் காட்சிகள் உலகை உலுக்கியன.
இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெற்ற போர் நடவடிக்கையில் இதுவரை 56,156 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 132,239 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 12 நாட்களாக இடம்பெற்ற மோதலில் ஈரானில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4,870 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் அடுத்த வாரம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான வன்முறை; தற்காலிகமாக ஓய்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை மிகவும் பதற்றமாகவும், அச்சமூட்டுவதாகவும் தொடர்கின்றது.

