ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார்
சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை,ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>ஈக்வடாரில் போதைப்பொருள் கும்பல் தலைவர் கைது!

