ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் கடந்த 12 ஆம் திகதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும், விடுதி மற்றும் அதன் அருகில் இருந்தவர்கள் 29 பேரும் உயிரிழந்தனர்.
ஜூன் 13 ஆம் திகதி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
கருப்புப் பெட்டி கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், தரவுகளை தரவிறக்கம் செய்ய வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அரசு இதை மறுத்தது.
இந்நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
சி.வி.ஆர் (காக்பிட் குரல் பதிவு) மற்றும் எஃப்.டி.ஆர். (விமானத் தரவு பதிவு) ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
விமான விபத்து தொடர்பில் புலனாய்வு பணியகத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்>சிறுவர்களைப் பாதுகாக்க விசேட செயற்றிட்டம் : அமைச்சரவை அங்கீகாரம்.

