உலகம்

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது.

இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

எனவே மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும், இங்குமாக ஓடினர்.
இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.

இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்; பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய 280 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணி நடந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டூடேரா ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ – தூக்குதண்டனை நிறைவேற்றம்.

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்