இந்தியா

இலங்கையுடனான ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு காரணம்!

அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வெளிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.

அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.

அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.

உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.

அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.

நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருக்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என இந்திய வெளிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்>கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என