கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (29-06) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

