குருணாகலில் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் இருந்து தீயில் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று (29-06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் தொரட்டியாவ மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மஹவ மற்றும் பிலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று, வர்த்தகர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் காரை வழிமறித்து வர்த்தகரை காரில் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் 48 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

