இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று முதலாம் திகதி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறலானது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ள நிலையில் இது தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை.
தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர் என கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் அவ்வாறு அத்துமீறிய இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்து;ளளாhர்

