யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது இயற்கை மரணமா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது இதுலரை தெரியவரவில்லை
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

