உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாதபோது நோயாளர்களுக்கு வழிகாட்ட வழி சொலலுமாறு அரசு வைத்தியர் சங்கம் கோரிக்கை

அரசினர் வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு என்ன வகையில் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், நோயாளி பராமரிப்பு குழப்ப நிலைக்குள்ளாகி இருப்பதாக அரசாங்க வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையில் வைத்தியர்களும் வைத்தியசாலையின் ஊழியர்களும் எந்த முறையை பின்பற்ற வேண்டும் என்பது தெளிவாக இருக்காததால், உடனடியாக சுகாதார அமைச்சால் முறைமையான வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

புஆழுயு பேச்சாளர் டொ. சாமில் விஜேசிங்கே கூறுகையில், சில சந்தர்ப்பங்களில், மருந்துகள் அல்லது அறுவைசிகிச்சை உபகரணங்கள் இல்லாததால், வைத்தியர்கள் நோயாளிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினரிடம் அவற்றை வெளியிருந்து வாங்குமாறு கூற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றார்.

‘ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது உபகரணம் இல்லாதபோது, நோயாளிகள் வெளியிருந்து வாங்கி கொண்டு வரும்படி சொல்லி, பின்னர் சிகிச்சையைத் தொடருகிறோம்.

எடுத்துக்காட்டாக, சில சமயங்களில் ஹாஸ்பிடலில் ஆக்ஸி–பெனிடின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் இருப்பினும், அவை செயல்படுவதில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

கண் அறுவை சிகிச்சைக்காக உள்ள லென்ஸ்களும் சில நேரங்களில் பயனில்லாதவையாக இருக்கலாம்.
இந்நிலைகளில், நோயாளிகளுக்கு நிலைமையை விளக்குகிறோம்; அவர்கள் வெளியிருந்து தேவையானவற்றை வாங்கி கொண்டு வருகிறார்கள்,’ என்றார்.

இந்தச் செயல்களை வைத்தியர்கள் நோயாளிகளின் நலனுக்காக செய்கிறார்களென்றாலும், அதிகாரப்பூர்வக் கொள்கை இல்லாத நிலையில் இதனை செய்வது சட்டரீதியாகவும் தொழில்முறையிலுமான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இது நோயாளிகளுக்கான நன்மைக்காகத் தான்.
ஆனால் தற்போது வைத்தியர்கள் மத்தியில், அதிகாரபூர்வ வழிகாட்டுதல்கள் இல்லாமல் இந்த நடைமுறையைத் தொடரக்கூடாது என்பதே பொதுக் கருத்தாகியுள்ளது.
இது நோயாளி பராமரிப்பை பாதிக்கிறது. அறுவைசிகிச்சை மற்றும் சிகிச்சை பெற எதிர்பார்ப்போர்கள் பட்டியல் நீளமாகிறது.

அதனால்தான் நாங்கள் தெளிவான வழிகாட்டுதலும், நடைமுறை திட்டமும் தேவைப்படுகிறது என கோருகிறோம்,’ என்றார்.

மேலும், இந்த நடைமுறையை பயன்படுத்தி, வெளிநாட்டில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கச் சொல்வதில் யாராவது மோசடி செய்திருந்தால் அல்லது சட்டவிரோதமாக பணம் வாங்கியிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்து;ளளாh

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்