அமெரிக்கா, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 30 வீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை, இலங்கையின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய ஆடை ஏற்றுமதித் துறையை ஆழமாகக் குலைக்கக்கூடியது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் துறையில் சுமார் 300,000 பேர் நேரடியாக வேலை செய்து வருகின்றனர்.
மேலும், தனியார் தையல் தொழிலாளர்கள், சில்லறை தொழிலாளர்கள், மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் இதன் தாக்கத்தை எதிர்கொள்கின்றன.
இலங்கை ஆடைத்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (துயுயுகு) தலைவர் யோஹன் லாரன்ஸ், ‘இது எதிர்பாராத ஓர் அச்சுறுத்தல்.
நாங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் உரையாடல் நடத்தி, இந்த வரி சுமையை குறைக்குமாறு முயற்சி செய்கிறோம்’ எனக் கூறினார்.
அதிக வரி காரணமாக, வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் போட்டியிடும் இலங்கையின் திறனும், அதனால் பின் தங்க வாய்ப்பும் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய வரி மேலதிகமாகத் தொடர்ந்தால், முன்னிலை ஆடைத்தொழிற்சாலைகள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள நேரிடும் என்பதும் கவலைக்கிடமான ஒன்று.

