கூட்டுறவு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் எதிரானது.
ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் அடக்கி வாசிப்பது அவசியமானது.
கூட்டுறவு முறைமையை வினைத்திறனாக்க வேண்டுமாயின் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றியதாவது, கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை செய்வதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை குறித்த விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் கூட்டுறவு வங்கிகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட விடயதானமாகும்.
இந்த விடயதானம் குறித்து மத்திய அரசாங்கம் நெறிப்படுத்தல் மற்றும் கண்காணிப்புக்களை மேற்கொள்வது பொறுத்தமற்றது.
கூட்டுறவு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் எதிரானது.
ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் அடக்கி வாசிப்பது அவசியமானது.
1972 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் கூட்டுறவு சங்கம் சமூக நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இருப்பினும் கூட்டுறவு வங்கிகள் ஏனைய வங்கிகளை போன்று செயற்பட முடியாது.
இருப்பினும் வங்கியால் ஆற்றப்படும் கருமங்கள் மற்றும் பணிகளை ஆற்றுவதற்கான இயலுமை காணப்படுகிறது.
கூட்டுறவு சேவையை வினைத்திறனாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும்.இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

