இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
400 கிராம் பெட்டிக்கு 100 ரூபா உயர்வு ஏற்பட்டுள்ளது, 1 கிலோ கிராம் பாக்கெட் விலை 250 ரூபா வரை உயர்ந்துவிட்டது என்று பால்மா இறக்குமதி சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வால், ஏற்கனவே பொருளாதார அழுத்தத்தில் வாழும் மக்களுக்கு மேலும் சுமை சேரும் என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (10-07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்:
‘ஒரு கிலோ பால்மா பவுடரக்கு 700 ரூபா வரி விதிக்கப்படுவது அரசாங்கத்தின் கொடூரமான வரி கொள்கையை காட்டுகிறது.
இது குழந்தைகளின் மற்றும் முதியோர் சத்துசேர்க்கையையே பாதிக்கிறது.
நுகர்வோர் மீது சுமை ஏற்றி, பால்மா விலை உயர்வுக்கு நிறுவனங்களை அரசே தள்ளுகின்றது
‘ஒரு கிலோ பால்மா பவுடருக்கு ஏன் இவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? எனவும் அந்த வரியை ஏன் குறைக்க முடியாது என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரிடம் தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும், உள்நாட்டு பால்மா பவுடர் உற்பத்தியாளர்கள், உள்ளூர் விலைகளை உயர்த்த வேண்டாம் என்றும், மில்க்-டீ விற்கும் உணவகங்கள், அதற்கான விலையையும் உயர்த்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

