பால்மா விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாக, இலங்கை அரசாங்கம் சமீபத்தில் அமெரிக்காவுடன் கொண்டிருந்த வரிச் சலுகை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன.
அதன்படி சில இறக்குமதிச் உhயசபநள குறைக்கப்பட்டாலும், நாணயமாற்றக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்திருப்பதால், விலை உயர்த்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதற்கிடையில் மத்திய வங்கியின் ஆளுநர், பால் மா விலை அதிகரிப்பிற்கான காரணத்ததை விளக்கியுள்ளார்
‘இது மக்கள் எதிர்பார்த்தது போல் அமெரிக்காவுக்காக வழங்கப்பட்ட சலுகை அல்ல.
நாட்டின் உள்நோக்கான பொருளாதார சீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே’ என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அரசியல் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்க மறுக்கின்றன.
முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் டயசிறி ஜயசேகர ஆகியோர், ‘அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவம் காரணமாக நாடு உணவு தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது’ என கடும் விமர்சனம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வகை விலை உயர்வுகள் நேரடியாக மக்களின் அன்றாட வாழ்வை தீவிரமாக தாக்குகின்றன.
சிறு குடும்பங்கள், வேலைக்குச் செல்பவர்கள், நிலுவையில் உள்ள கடன்கள் உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளனர்.
அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டியது தான்.
ஆனால் இன்று அந்த உரிமை கூட கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

