இந்த மாற்றங்கள் 2026ஆம் ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன. பிற வகுப்புகளுக்கு பின்னர் நீட்டிக்கப்படும்.
இந்த புதிய திட்டம் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
இது மாணவர்களை நவீன உலகில் வாழத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அறிவும் திறமையும் கொண்ட குடிமக்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் பங்களிக்கவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறும்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மாவட்டங்களின் கல்வித் துறை அதிகாரிகளுக்கு திட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்குவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
முதலாவது நிகழ்வு ஜூலை 11ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதில் பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரினி அமரசூரியா மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜூலை 12ஆம் தேதி அனுராதபுரத்தில் வடமத்திய மாகாணத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று ஜூலை 13ஆம் தேதி திருகோணமலையில் கிழக்குப் மாகாணத்திற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது. மற்ற மாகாணங்களுக்கான நிகழ்ச்சிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.
இந்த திட்டத்தின் ஊடாக நாட்டின் கல்வி அமைப்பில் பெரும் மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

