323 கன்டெய்னர்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியதற்கும்,
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரிமைச் சிக்கல்களை எழுப்பியதற்கும், சபாநாயகரின் பதில் இதுவரையும் கிடைக்கவில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளா
அதனைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊஐனுயால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படினர்.
இதற்கு எதிர்வினையாக, அவர்களது அழைப்புகள் முற்றிலும் காரணமற்றவை என எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சபாநாயகர் இதுவரை இந்த உரிமைச் சிக்கலைப் பற்றி எந்தவொரு தீர்மானத்தையும் எடுத்துவைக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் இது ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொள்வதற்கு தயங்குகிறார் என்றும் அவர் கூறினார்.
சுயாதீன எதிர்க்கட்சியின் உறுப்பினர் டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வழங்கிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஊஐனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும், உறுப்பினர்களின் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகவும் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் என்பதால், அவர் உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடி வருகின்றனர்.
‘இந்த மாதிரியான செயல்கள் தொடருமானால், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,’ என ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சபாநாயகரும், சபைத் தலைவரும் இதுவரை இதுகுறித்து ஊடகங்களுக்கு எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.

