இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள 2026 டி20 உலகக் கிண்ண தொடருக்காக, இத்தாலி அணியின் தகுதி பெற்ற சாதனை ஒரு வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளது.
இதுவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐஊஊ) போட்டிக்காக இத்தாலி தகுதி பெற்றது முதல் முறையாகும்.
இத்தாலி அணி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஹேக்கில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்திடம் 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த போதிலும், தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருந்து 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதே நேரத்தில், நெதர்லாந்து அணியும் ஜெர்ஸி அணியும் தங்களுடைய இடத்தையும் உறுதி செய்தது.
ஜெர்ஸி அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தி 5 புள்ளிகளுடன் சுற்றைப் பூர்த்தி செய்திருந்த போதும், நிகர ஓட்ட விகிதத்தில் இத்தாலிக்கு பின்னடைந்ததால் தகுதி பெற முடியவில்லை.
ஜெர்ஸி, இத்தாலி நெதர்லாந்தை வென்றிருந்தால், தாங்களே தகுதி பெற வாய்ப்பு இருந்தது. எனினும், இத்தாலியின் நிகர ஓட்ட விகிதம் மேலோங்கியது.
இதுவரை தகுதி பெற்ற 15 அணிகள்:
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, கனடா, ஐர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய அணிகள் தங்களுடைய இடங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
மீதமுள்ள ஐந்து இடங்களுக்கு, ஆப்பிரிக்க தகுதி சுற்றிலிருந்து இரண்டு அணிகள் மற்றும் ஆசியா–ஈஸ்ட் ஆசிய பசிபிக் பகுதி இறுதிப் போட்டிகளிலிருந்து மூன்று அணிகள் தகுதி பெற உள்ளன.
இத்தாலியின் வளர்ச்சி மற்றும் வீரர்கள்
பொதுவாக கால்பந்து மற்றும் சமீப காலமாக டென்னிசில் உலக கவனம் பெற்ற இத்தாலி, கிரிக்கெட்டிலும் தங்கள் தடம்பதித்து வருகிறது.
ஸ்காட்லாந்தை எதிர்த்து பெற்ற அதிர்ச்சி வெற்றி, இத்தாலிக்கு இந்த முன்னேற்றத்தின் கதவைத் திறந்தது.
இத்தாலி அணியில், ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரராக விளையாடிய ஜோ பெர்ன்ஸ், பிக் பாஷ் லீக்கில் விளையாடிய மனெண்டி சகோதரர்கள், மற்றும் ஐPடு 2025 ஏலத்திற்கு தன்னை பதிவு செய்த தாமஸ் ட்ராகா போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர்.
இந்த பலம் இத்தாலியின் முன்னேற்றத்துக்கு அடிப்படை அளித்துள்ளது.
2026 உலகக் கிண்ணப் தொடருக்கான இத்தாலியின் தகுதி, உலக கிரிக்கெட்டின் பரவலையும் புதிய அணிகளின் எழுச்சியையும் காட்டும் முக்கியமான கட்டமாகும்.