2025 மே மாதத்தில் இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை 1.507 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179 மில்லியன் டொலர் குறைவாகும்.
இந்த வீழ்ச்சியானது தனிநபர் வாகன இறக்குமதியில் பெரிதாகக் காணப்படாமல் இருந்த போதிலும், சேவைத் துறையிலுள்ள வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சில வர்த்தகப் பொருட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உருவாகியுள்ளது.
தனிநபர் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மதிப்பு மே மாதத்தில் 118 மில்லியன் டொலராக இருந்தது.
இது ஏப்ரல் மாதத்தில் பதிவான 134 மில்லியனுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும்.
எனினும், மொத்த இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி, சேவைத்துறையின் பலவீனத்தால் மாறுபட்ட பாணியில் கட்டுப்படுத்தப்பட்டது.
இதே நேரத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து வந்த பணப்பரிமாற்ற வருவாயானது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
2025 ஜூன் மாதத்தில் மட்டுமே USD 635.7 மில்லியன் பணம் பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில் 22மூ அதிகரிப்பு ஆகும்.
2025 இன் முதல் பாதியில் மொத்த பணப்பரிமாற்ற வருவாய் USD 3.7 பில்லியனாக இருந்தது.
இது 2024 இன் அதே காலப்பகுதியில் இருந்ததைவிட 18.9மூ அதிகம். 2024ஆம் ஆண்டில் முழுவதும் இலங்கை பெற்ற பணப்பரிமாற்ற வருவாய் USD 6.57 பில்லியனாக இருந்தது.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, 2024 இல் மட்டும் 312,836 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகப் புறப்பட்டிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.
மே மாதத்தில் ஏற்றுமதி, பணப்பரிமாற்றம் மற்றும் சேவைகள் மூலம் இலங்கைக்கு USD 2.14 பில்லியன் வருவாய் வந்துள்ளது.
இது பொருட்கள் இறக்குமதியைவிட 633 மில்லியன் டொலர் அதிகமாகும்.
எனினும், சேவைத்துறை வருவாயில் தற்காலிகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சேவை வருமானம் ஏப்ரல் மாதத்தில் இருந்த ருளுனு 602 மில்லியனிலிருந்து மே மாதத்தில் ருளுனு 464.6 மில்லியனாகக் குறைந்துள்ளது.
சுற்றுலா வருவாய் USD 256 மில்லியனிலிருந்து ருளுனு 164 மில்லியனாக வீழ்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் ருளுனு 85.4 மில்லியனிலிருந்து ருளுனு 61.6 மில்லியனாக குறைந்துள்ளன.
முதலீட்டு பொருட்களின் இறக்குமதி மே மாதத்தில் ருளுனு 344.3 மில்லியனாக இருந்தது. இது ஏப்ரலில் பதிவான USD 371 மில்லியனுடன் ஒப்பிடுகையில் சற்றே குறைவாகும்.
இந்த புள்ளிவிவரங்கள், இலங்கையின் வெளிவட்ட நிதிநிலை பற்றிய சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. ஏற்றுமதியையும், பணப்பரிமாற்றத்தையும் தாங்கி செல்லும் பொழுது சேவைத்துறையின் திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி எதிர்கால வளர்ச்சிக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

