ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய 22 முக்கியமான வாக்குறுதிகளில், இதுவரை வெறும் ஒரு வாக்குறுதியே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னணி ஆய்வு நிறுவனம் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுர மீட்டர் எனப்படும் இணைய கண்காணிப்பு முறையின் மூலம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி, “உழைக்கும் போதே செலுத்தும் வரி” எனும் வாக்குறுதியே தற்போதைய வரையில் முற்றிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதி 21 வாக்குறுதிகளில் 35% மட்டுமே பகுதியளவில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு, ஆட்சி முறைமையின் சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, சட்ட ஒழுங்கு நிலைமை, சமூகப் பாதுகாப்பு போன்ற பல முக்கிய பிரிவுகளிலும் மெதுவான செயல்பாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன எனவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த நிலைமை ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றத் திறனை கேள்விக்குள்ளாக்கும் வகையிலேயே பார்க்கப்படுகிறது.

