இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 30 வீத பரஸ்பர கட்டணத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட, உயர்மட்ட இலங்கை அரசுக்குழுவொன்று ஜூலை 18ஆம் திகதி அமெரிக்கா செல்லும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வெளியான அறிவிப்புக்குப் பின்னர், ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய கட்டணத்திற்கு முன்பான நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட 44 வீத கட்டணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஜூலை 12ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஏற்றுமதி துறையினருடன் நடைபெற்ற சந்திப்பில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, இலங்கை அமெரிக்கா பொருட்கள் இறக்குமதி விஷயத்தையும் பேச்சுவார்த்தையில் எடுத்துக்கொள்வதாக உறுதியளித்தார்.
முக்கிய உற்பத்தித்துறைகளைப் பாதிக்கக்கூடிய இழப்புகளை தவிர்த்து, நாட்டின் ஏற்றுமதி வருவாயை பாதுகாப்பதற்காக அரசு விரைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

