வடக்குக் கடற்பரப்பில் அதிகரித்து வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையால் முடியவில்லையெனில், அந்தப் பொறுப்பை ஒரு மாதத்திற்கு மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு; வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார
மன்னார் முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி வருகின்றன என்றும், இது தொடர்பாக கடற்படையும் அரசாங்கமும் காரணங்களையே கூறிக்கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
கடற்படையினர் டோறா படகுகள் இல்லை என்பதுபோன்ற காரணங்களை முன்வைக்க முடியாது.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவை.
இந்தச் செயற்பாடுகளுக்கு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் மௌனம் ஒப்புதல் போலவே தெரிகிறது.
இதனால் மீனவர்களுக்கு கடற்படையின்மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறலால், தமிழ் மீனவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற முடியாத கடற்படையினரால் அங்கு ஏன் இருக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
இதை தடுக்கும் பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படைத்தால், அவர்கள் நிச்சயம் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்

