இஸ்ரேல் எதிர்ப்பு சமூக ஊடக பதிவுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய மொஹமட் சுஹைல் என்ற இளைஞர், இன்று மவுண்ட்லவேனியா நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இன்றைய நீதிமன்ற அமர்வில், தெகிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி, சட்டமா அதிபரின் பரிந்துரையின் அடிப்படையில் சுஹைலை பிணையில் விடுவிக்கலாம் எனக் கூறியபோது, நீதவான் அந்த பரிந்துரையை ஏற்று பிணை உத்தரவு வழங்கினார்.
2024 ஆம் ஆண்டு அக்டோபரில், இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே சுஹைல் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் அடையாள அட்டை இல்லாமை காரணமாக கைது செய்யப்பட்டதாக கூறிய பொலிஸார்,
பின்னர் இவர் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், இன்ஸ்டாகிராமில் இஸ்ரேலிய கொடியை காலால் மிதிக்கப்படும் புகைப்படம் பதிவிட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்தும் நீதிமன்றம் அவரது பிணை வழக்கை பரிசீலித்து விடுதலை வழங்கியது.

