ஜேர்மன் நாட்டிலிருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் திரும்பிய ஒருவர் தலைமையில் 11 பேர் இணைந்து, இளைஞரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் நபர், தனது சகோதரியின் கணவருடன் ஏற்கனவே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கும்பல் மது அருந்திய பிறகு இளைஞரை வம்புக்கு இழுத்து கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கியதால், பாதிக்கப்பட்டவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், 11 பேரும் தற்போதும் தலைமறைவு ஆகியுள்ளனர், அவர்களை விரைவில் பிடிக்க போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், ஜேர்மனிலிருந்து வந்தவர் மீண்டும் அந்நாட்டுக்கு தப்பிச் செல்லாமல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.

