சுகாதாரத் துறையில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு, புதிய ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியாகும் என அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
மருத்துவ துறையில் தாதியர் சேவை தீவிரமடைந்துள்ள நிலையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் 33 வைத்தியசாலைகளில் ஒருவரும் தாதியர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான தீர்வாக, 2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 2650 பேர் மற்றும் தாதியர் பட்டதாரிகள் 850 பேர் ஆகியோரை தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவர்கள் இருவருக்குமான ஆட்சேர்ப்புகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்கள் நாளை மறுநாள் (18) பிரசுரிக்கப்படும் எனவும், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

