இலங்கையின் மின் கட்டணங்கள் குறித்து பாவனையாளர்களிடையே எழும் கோபமும் குழப்பமும் புதியதல்ல.
ஆனால், இப்போது அந்தக் கோபம் நியாயமானதோடு, மேலும் விரிவடைந்துள்ளது
நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளான வீதி விளக்குகளுக்கான மின்சாரம் செலுத்தப்படாமல் இருக்க, அதன் செலவுகளை பொதுமக்களிடம் விலையீட்டுச் சுமையாக மாற்றுவதென்பது நிர்வாகப் பொறுப்பற்றதற்கும், அரசியல் கபடத்திற்கும் எடுத்துக்காட்டு ஆகும்.
இலங்கையின் சுமார் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீதி விளக்குகள், ஆண்டுக்கு 150 கிலோவாட் மின்சாரத்தை உட்பொருந்துகிறது.
இது சுமார் 7 பில்லியன் ரூபாய் செலவாகிறது.
இந்த மின்விளக்குகளுக்கான செலவுகளைச் செலுத்த வேண்டியவர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (சுனுயு) மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் (மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள்) ஆக இருக்கின்றன.
ஆனால், இந்த அமைப்புகள் தங்கள் நியாயமான கட்டணங்களை செலுத்தாதபோது, அந்தத் தவறுக்கு பொறுப்பேற்கவில்லை.
பதிலுக்கு, அந்த செலவுகள் பொதுமக்கள் மின்தரிப்புகளில் உயர்வாக மாறிக்கொண்டு வருகின்றன.
இது மிக அபாயகரமான பிழை
பொதுத் திட்டங்களை நிர்வகிக்க முடியாத நிர்வாகங்கள், தங்கள் சொந்த தவறுகளை மக்கள் மேல் ஏற்றிவிடுகின்றன.
இதற்குள் நம்மில் பலர் மாதத்திற்கு ஏற்கவே முடியாத கட்டணங்களை செலுத்தி வருகின்றோம்.
ஆனால் நாம் பயன்படுத்தாத மின்சாரத்திற்கும், நிர்வாக ஊழியர்களின் அலட்சியத்திற்குமான செலவுக்கும் நாம் விலையீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு பொதுவுடைமையாக்கப்பட்ட ஊழல் நிழல். பொது பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவர்கள் – அது ஒரு தெரு விளக்காக இருந்தாலும் – அதன் நிதிப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது அவர்களின்; கடமை.
அது தவிர்க்கப்படும் போது, அது குற்றம் மட்டுமல்ல, நேர்மையான மக்கள் வாழ்க்கையில் தீமையாகும்.
மின்சாரம் என்பது ஒரு சேவையல்ல – அது ஒரு உரிமை. அந்த உரிமையை கடத்திக் கொண்டு அரச ஊழியர்கள் தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்காமல், பொதுமக்களிடம் பணம் அறவீட்டு செயற்படுவது, மக்கள் நம்பிக்கைக்கு நேரெதிரான செயல்.
இது போன்ற பிழைகள் திருத்தப்படாவிட்டால், மக்களுக்கு பொதுத்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் குறைக்கும்.
