இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 7 லட்சம் தெருவிளக்குகளுக்கான மின் கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் சரியாக செலுத்தாமல் இருப்பது, பொதுமக்களுக்கு மின் விலை உயர்வாக மாறி வருகின்றதாக மின்சாரம் நுகர்வோர் சங்கம் (ECA) ) குற்றம்சாட்டியுள்ளது.
மின்சாரம் நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,
இந்த விளக்குகளுக்கு வருடாந்தம் 150 கொவாட் மணிநேர மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கான செலவாக 7 பில்லியன் செலவாகிறது.
ஆனால் இந்தக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய வீதி அபிவிருத்தி சபை (RDA) மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள்) காலத்திற்கேற்ப கட்டணம் செலுத்தாமல் இருக்கின்றன.
இதன் விளைவாக, இந்தக் கட்டண பாக்கிகள் பொதுமக்கள் மீது மின்சாரம் விலை திருத்தம் மூலம் தாக்கல் செய்யப்படுகின்றன.
இது நியாயமற்றதாகும். இதற்கான கவனத்தைத் திருப்ப நாங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.
மின்சாரம் நுகர்வோரின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன பதில் வழங்கவில்லை.
இலங்கையின் மொத்த மின்சார தேவைப் பார்வையில், தெருவிளக்குகள் சுமார் 1.5 சதவீத மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன.
பெரும்பாலான விளக்குகள் நடுத்தர அழுத்தம் அல்லது தாழ் அழுத்த மின்கம்பிகளில் தொங்கவைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட தெருவிளக்கு கம்பிகள் பெரும்பாலும் நகரப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன.

