இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை உருவாக்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவேஇ அரசாங்கம் அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டியது அவசியம் எனவும்இ அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்கப்பட்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மேலும் அவர் கூறியதாவது:
‘முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன ஐக்கிய தேசியக் கட்சி பற்றிய பல நூல்களை எழுதியுள்ளார்.
இது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்களாக இருக்கின்றன.
கடந்த 75 ஆண்டுகளில் அரசாங்கங்களை விமர்சிப்பவர்கள் இதைப் படித்து உணர வேண்டும்.’
மேலும்இ இலங்கையும் சீனாவும் இடையே 1953 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம் குறித்து அவர் குறிப்பிடுகையில்இ அது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கான அடிப்படை எனவும்இ இலங்கை சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட முதலாவது நாடாக இருப்பதும் முக்கியம் எனவும் கூறினார்.
பொருளாதார மீட்பு குறித்து பந்துல குணவர்தன எழுதியிருந்த கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயேஇ ‘நான் உருவாக்கிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டால் நிலையான முன்னேற்றம் ஏற்படும்.
ஆனால் அவற்றை அரசியல் நோக்கில் மாற்றியமைத்தால் நெருக்கடி மீண்டும் வரலாம்’ என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

