கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையம் (ECT) ) தனியாராக்கப்படுவதாக முன்னணி சோசலீச கட்சி (FSP) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தத் தரப்பில், அண்மையில் ECT முனையத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Colombo Eastern Container Terminal (Private) Limited எனும் புதிய வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதன் பின்னணியில் தனியாராக்கல் முயற்சி இருக்கின்றதா எனக் கேள்வி எழுந்தது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்தளித்த துறைமுகங்கள் மற்றும் குடிமா விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு,
‘இந்த நிறுவனம் 100 வீத முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையால் (ளுடுPயு) சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனம்.
இது தனியாராக்கல் மாதிரி அல்ல. இது ஒரு வணிக மாதிரி மட்டுமே. செயற்பாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்
முன்னணி சோசலீச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடை,
‘இது அரச சொத்துக்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நீண்டகால திட்டத்தின் தொடக்கமே.
அரசு இப்போது நிறுவனங்களை உருவாக்கி, பின்னர் பங்குசந்தையில் பங்குகளை விற்று சொத்துக்களை விலைக்கு விடுகிறது.
(SLPA) உண்மையாகவே முனையத்தை நிர்வகிக்க இருக்கிறதெனில், புதிய நிறுவனம் உருவாக்க தேவையா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், புதிய நிறுவனம் வருங்காலத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டால், அதில் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான நுழைவு வாய்ப்பு உருவாகும் என்பதையும் அவர் எச்சரித்தார்.
அண்மையில் அமைச்சரவை, நுஊவு முனையத்தினை நிர்வகிக்கவும் இயக்கவும் புதிய வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒன்றை உருவாக்க ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

