இந்த ஆண்டு நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கான சீருடை தேவையின் முழுமையான விலை 5,171 மில்லியன் ரூபா அளவுக்கான துணியை சீன அரசு நன்கொடையாக இலங்கை;கு வழங்கியுள்ளது.
கொழும்பு மத்திய கல்வி அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனத் தூதர் கி ஜென்ஹொங், ‘இலங்கைக்கு தேவையான போது சீனா எப்போதும் நம்பகமான சகோதரனாகவும் உதவியாளரும் ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்
மேலும், ‘பள்ளி மாணவர்களின் யூனிபாமில் தையல் செய்யப்பட்ட ஒவ்வொரு தையலும், எங்கள் இரு நாட்டினதும் பழமையான நாகரிகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் நட்பின் கதை சொல்லும்’ என்றார் தூதர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ஹரினி அமரசூரியரும் கலந்து கொண்டு,
‘இலங்கை மற்றும் சீனாவின் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு இதுவரை தொடர்ந்து வருகிறது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சீனா பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியின் ஒரு பெரிய பங்கினை வழங்கியதற்கு பிறகு, 2025 இல் முழுமையான தேவையையும் சீனா வழங்கியுள்ளது.
இவ்வகை உதவி, தற்போது இலங்கையின் பொருளாதார சிக்கலான சூழலுக்குள் மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது. நமது அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கும் சீனத்திடம் தொடர்ச்சியான உதவியை கோரிவிட்டது’ என்று பிரதமர் தெரிவித்தார்.

