டிக்டாக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த நேற்று (ஜூலை 16) இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு, டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களை வெறும் பொழுதுபோக்காக அல்லாது, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான டிஜிட்டல் கருவியாக பயன்படுத்தும் பாதைகளைக் குறித்து நடைபெற்றது.
இந்த சந்திப்பில், டிஜிட்டல் கல்வி தொடர்பான சட்டங்கள், ஆராய்ச்சி, பாடத்திட்ட மாற்றங்கள், மேலும் டிஜிட்டல் ஒழுக்கம் மற்றும் இணைய அடிப்படையிலான பொருளாதார வாய்ப்புகள் குறித்து முக்கியக் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வித் துறையில் தற்போது இடம்பெற்று வரும் சீர்திருத்த நடவடிக்கைகளுடன் இணைந்து, இத்தகைய ஒத்துழைப்பு முயற்சிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை பிரதமரின் செயலாளர் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில், தெற்காசியாவுக்கான டிக்டாக் அரசாங்க உறவுகள் மற்றும் பொது விவகாரத் தலைவர் ஃபெர்டூஸ் அல் மொட்டகின், பிரதமரின் கூடுதல் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

