அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல – ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட நிலையில், காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலம் நேற்று (17) வலஸ்முல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ளதாக கடந்த 8ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து 16ஆம் திகதி அவர் வசித்த வீட்டின் பின்புறத்தில் நடைபெற்ற சோதனையின் போது மனிதக் கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மே 11ஆம் திகதி தகராறின் போது கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும், பின்னர் சடலத்தை வீட்டு பின்புறத்தில் புதைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சடலத்துடன் இணைந்த விசாரணையில், குறித்த மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த மற்றொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

