தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிரான வழக்கில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சபையில் உறுதி அளித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18-07) நடைபெற்றது.
இதில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன், தையிட்டி விகாரையை எதிர்க்கும் தீர்மானத்தை முன்வைத்தார்.
தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை, குறித்த வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவதை கோரிய பிரபாகரனின் கோரிக்கைக்கு பதிலளித்த தவிசாளர், அவர் இலவசமாகவே வழக்கில் முன்னிலையாவார் என்று உறுதி செய்தார்.

