இந்த சம்பவம் முசைலயவ ஆயடயமா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18-07) காலை இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
விபத்து நேரத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர்.
தீ பரவிய வேளையில், பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார்.
அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துடன் தொடர்புடைய நிறுவனம் செயற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், மற்ற பயணிகள் வழமைபோல் தங்களது பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

