சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரமான சூரிச்சில் ‘லிட்டில் ஸ்ரீலங்கா’ என அழைக்கப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, சூரிச் மாவட்டம் ஐது பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடத்திலிருந்து இவர்களை 2026 ஆம் ஆண்டுக்குள் வெளியேறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட பல தமிழ் வியாபார நிறுவனங்கள் இதன் மூலம் பாதிக்கப்படவுள்ளன. புதிய தொழிநுட்ப வசதிகளுடன் கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டுகளில் பல விற்பனை நிலையங்களுடன் கட்டிடம் ‘லிட்டில் சிறிலங்கா’ என அறியப்படும் விற்பனை மையமாக உருவானது.
விரிவாக்கப்பணிகளுக்குப் பின்னர் தற்போது உள்ள குத்தகைதாரர்கள் மீண்டும் அந்த இடத்தில் வணிகம் நடத்த அனுமதிக்கப்படுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதனால், குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

