இலங்கையின் ஆடை உள்பட ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வரும் உண்மையான வரி விகிதம் 58 வீதம் வரை உயர்ந்துள்ளதாக இலங்கை ஐக்கிய வணிக சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரிகள் மற்றும் பிற வரிகளைச் சேர்த்தால், இந்த வரி விகிதம் 45 வீதம் முதல் 58 வீதம் வரை மாறுபடுகின்றது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக வரிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இது அவர்களின் போட்டித் திறனை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், வர்த்தகச் சமநிலைக்கு புறம்பான தக்கப்பாடாகவும் சங்கம் எச்சரிக்கிறது.
மற்றொரு பக்கத்தில், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 17 வீத வரி மட்டுமே விதிக்கப்படுகின்றது.
இந்த விகிதங்களில் காணப்படும் பெரும்மாறுபாடு, உள்ளூர் வணிகங்களைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது எனவும் சங்கம் வலியுறுத்துகிறது.
எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 37 வீதமாக உயர்த்த வேண்டும் என்று சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், உள்ளூர் நிறுவனங்கள் தங்களுடைய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் போது, அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 20 வீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

