வவுனியா வடக்கு பகுதியில், இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில், வவுனியாவடக்கில் சமீபத்தில் அதிகரித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொண்டு தடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வவுனியாவடக்கு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், வவுனியாவடக்கு பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ. கிரிதரன், மற்றும் வவுனியாவடக்கு பாரதேச தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

