உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐநாவின் செயற்பாடுகள் அநுர அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துள்ளது- கஜேந்திரகுமார்

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு வடிவமைப்பு கொடுப்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகும் என அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (20-07) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் கூறியதாவது:

தமிழின படுகொலைக்கு பொறுப்பு கூறும் நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுவதற்கான அழைப்பை விடுத்தோம்.

இவ்வழைப்பிற்கு தமிழரசு கட்சி பங்கேற்கவில்லை. எனினும், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

ஜெனிவாவில் நடைபெறும் விசாரணைகளின் சூழலில், இனப்படுகொலையின் பொறுப்புக்கூறல் சுழற்சியில் முடங்கிவிடக்கூடாது.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றனர்.

அவர்களின் நிலையை மறந்துவிட முடியாது. தற்போது, முக்கியமான சாட்சியங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.
இது தொடருமானால், தமிழின படுகொலைக்கு பொறுப்புக்கூறல் முற்றிலும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரிக்கிறார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கத்தில் உள்ளது என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள் மக்களிடையே பரவலாக இருக்கின்றன.

அதனைப் பயன்படுத்தி, ஐ.நா அமைப்பின் செயற்பாடுகளையும் பொறுப்புக்கூறலையும் தடுக்க அரசாங்கம் புதிய யுக்திகளை கையாள்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழரசு கட்சியும், தறிதெரிந்து அல்லது தெரியாமலோ, இந்நிலையில் துணையாக செயல்படுகின்றது.
இதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அந்தக் கட்சி அனுப்பிய கடிதத்தை எடுத்துக்காட்டலாம் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்திலும் முறையீடுகள் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு அனைத்து கட்சிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கடிதத்தின் முக்கியமான உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய சூழலுக்கேற்ப புதிய கோரிக்கைகளுடன் கூடிய புதியக் கடிதம் தயாரிக்கப்பட உள்ளது.

இக் கடிதம், தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கைகள் என்ன என்பதை உலகிற்கு தெரிவிப்பதுடன், அவற்றுக்கு செயல் வடிவத்தை வழங்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மக்களிடம் அணி திரட்டும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

இக் கடிதம் வெளியான பிறகு, இதுவரை எம்முடன் இணையாதவர்கள் அதன் உள்ளடக்கத்தைப் பார்த்த பின், எங்களுடன் இணைந்து கொள்ள முடியும் எனக் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்