யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நாவாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

