யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு புடவையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி 25 இலட்சம் பெறுமதியான பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது பற்றி மேலும் தெரியவருவதாவது வியாபாரம் முடிவடைந்தபின் புடவையக பணியாளரொருவர் கடையை பூட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அந்த தீ வேகமாக பரவியதன் விளைவாக கடை முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தீ விபத்துக்கான காரணங்களை அடையாளம் காணும் வகையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

