தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாரையின் விகாராதிபதியான ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
தங்கள் சொந்த காணியில் கட்டடம் ஒன்று சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படுவதாக ஒரு நபரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியில் உரிமை உள்ளது எனின் அதற்கான சட்ட ஆவணங்களை உடனடியாக பிரதேச சபையில் சமர்ப்பிக்குமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில், காணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு வெளியேறாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதததில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

