ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன விமானம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
டின்டா விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து திடீரென மாயமானது.
அந்த விமானத்தின் எரிந்த உடற்பகுதியை ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரும் உயிர் பிழைத்திருக்கச் சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த விமானம், பயணத்தின் இறுதிக்கட்டத்தில் டின்டா விமான நிலையத்தை நெருங்கும் தருணத்தில் விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
விமானம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், முழுமையான விசாரணைக்குப் பின் மட்டுமே விபத்தின் காரணம் உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

