பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும், நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தின் போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள மக்ரோன், ‘காசா பகுதியில் போரை நிறுத்தி பொதுமக்களை காக்கும் நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.
உடனடியாக சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லா பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்,’ எனக் கூறியுள்ளார்.
அத்துடன், காசா மக்களுக்கு தற்போது பெரும் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும், அதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், அது தொடர்பான விமர்சனங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

