அக்மீமன ஹினிதும்கொட கனிஷ்ட பாடசாலைக்கு அருகில் நேற்று (24-07) வியாழக்கிழமை நடந்த சோகச்சம்பவத்தில், தனது பிள்ளைகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மாணவனொருவர் மோதியதாக தெரியவந்துள்ளது.
விபத்தின் தாக்கத்தில் பெண்ணின் ஒரு கால் பகுதி துண்டிக்கப்பட்டு, அந்த பகுதி மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது. இந்த நிலையிலும் மாணவன் தப்பிச் செல்ல முற்பட்டு, சைக்கிளில் சிக்கியிருந்த காலை அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளான்.
இந்த சம்பவத்தின் போது காயமடைந்த பெண், காலி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் விரைந்து செயல்பட்ட அக்மீமன பொலிஸார், மாணவனை அவரது வீட்டில் மறைந்து இருந்த நிலையிலேயே கைது செய்துள்ளனர். மேலும் காட்டுப் பகுதியில் வீசப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட காலை மீட்டும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
காலை மீட்டல் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

