ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபு, தமிழரசுக்கட்சிக்கும் வழங்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் கோரியமைக்கப்பட்ட கடிதம், அடுத்த மாதம் ஐ.நா.வுக்கு அனுப்பப்படும்.
இந்தக் கடிதத்தை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இந்த செயற்பாட்டுக்கான கலந்துரையாடலுக்கு தமிழரசுக்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவர்கள் பங்கேற்காமல் புறக்கனித்தனர்.
அதற்கான காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை.
இந்நிலையில், தமிழரசுக்கட்சியை ஒதுக்கும் நோக்கம் எமக்கு இல்லை எனக் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார
அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக கொண்ட கட்சி என்பதால், பொறுப்புக்கூறல் தொடர்பான முயற்சிகளில் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரைபு இந்த வாரத்தில் முழுமையாக தயாரிக்கப்பட்டு, தமிழரசுக்கட்சிக்கு அனுப்பப்படும்.
அவர்கள் அதனை ஏற்கக்கூடியதாகவோ, மாற்றங்களை முன்மொழிந்தாலும் கலந்துரையாட தயார் எனவும் கூறினார்.
தமிழரசுக்கட்சி கையொப்பமிட மறுத்தால், அதற்கான பதிலை அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும் எனவும், தமிழர் தேசத்தில் உள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்னேறவே முயற்சிக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

