செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும், தமிழர் மீது சிங்கள அரசு நிகழ்த்திய அநீதிக்கு சர்வதேசத் தளத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோஷமிட்டனர்.
‛‛தோண்ட தோண்ட எலும்புக் கூடு… பார்க்க பார்க்க நொறுங்குது இதயக் கூடு… இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்? இனப்படுகொலை என ஐ.நா. உரிமை ஆணையம் அறிவிக்க வேண்டும்.
நீதி வழங்க மறுக்காதீர்கள். இனியும் மௌனம் காக்காதீர்கள்’ என உருக்கமாகக் கூறப்பட்டது.
மத்திய அரசும், தமிழக அரசும் பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடுக்க வேண்டும், அழுத்தம் கொடுக்க வேண்டும் என பல்வேறு கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

