கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய காவலர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையிலே கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

