இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார மரபுகள் குறித்து அறிந்துகொண்டது.
புதுடில்லியில் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஷ்ரியுடன் சந்திப்பின்போதுஇ தொழில்நுட்பம்இ முதலீடுஇ தொடர்பு ஆகிய துறைகளில் இருநாடுகளின் பங்குடைமை வலுப்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த குழுவினர் இந்திய பாராளுமன்றத்தை பார்வையிட்டுஇ சட்டசபை செயல்முறைகள் மற்றும் குழுக் கட்டமைப்புகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
பீகார் மற்றும் கர்நாடகா மாநில ஆளுநர்களுடன் சந்திப்புகள்இ இளம் அரசியல் தலைவர்களுடனான உரையாடல்கள் இடம்பெற்றன.
மாருதி சுசுகிஇ டிஜிட்டல் அடையாள ஆணையம்இ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்இ ஐஐடி டெல்லிஇ நாலந்தா பல்கலைக்கழகம்இ இந்திய விஞ்ஞான நிலையம்இ இஸ்ரோ ஆகியவை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அனுபவங்கள் பெறப்பட்டது.
புதுடில்லியில் இந்திய தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்த வட்டமேசை கலந்துரையாடலும் இடம்பெற்றது. புலமையாளர்கள்இ ஆய்வாளர்கள்இ மேற்படிப்பு நிலையங்கள்இ மையங்களுடன் இந்திய பொருளாதாரம்இ வெளிவிவகாரக் கொள்கைஇ புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புஇ நாகரிக வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
போத்கயாவில் உள்ள இந்திய முகாமைத்துவ நிலையத்தில் ஆட்சி மற்றும் தலைமைத்துவம் குறித்து திசைமுகப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. மகாபோதி விகாரைக்கும் இவர்கள் நேரில் சென்றனர்.
இந்த நிகழ்வுஇ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். 2025 ஏப்ரலில் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு வந்தபோது அறிவித்த 700 பயிற்சி ஆசனங்களில் ஒன்றாக இவ்விஜயம் முன்னெடுக்கப்பட்டது.
இதுஇ இந்திய – இலங்கை பங்குடைமையின் ஆற்றலை உணர்த்தும் வகையிலும் இளம் அரசியல் தலைமையினரின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

