இன்று காலை 10 மணியளவில் நல்லூர் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வுடன் மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டபோது, ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று நுழைந்ததாக தெரிகிறது.
திருவிழா காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தண்ணீர் வாகனத்தைத் தவிர மற்ற எந்தவொரு வாகனத்திற்கும் அல்லது பாதணிகளுடன் உள்ளோருக்கும் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்பதும், பாதுகாப்பு விதிகள் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இராணுவ வாகனம் ஆலய வளாகத்தில் நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இராணுவத்தின் அத்துமீறல் தொடருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டும், திருவிழா நாட்களில் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் ஆலய வளாகத்திற்குள் நுழைந்து அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது என்பது இக்காரணத்தால் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

