முல்லைத்தீவு மல்லாவியில் இளைஞர் ஆனந்தராசா சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி இன்று மல்லாவி பொது அமைப்புகள்இ வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.
பேரணியில் பங்கேற்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்இ குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில்இ மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
கடந்த ஆண்டு சஜீவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில்இ வவுனிக்குளம் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக மல்லாவி பொலிஸில் அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த போதும்இ இதுவரை பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2024 ஆகஸ்ட் 16 மற்றும் 2025 மார்ச் 14 ஆகிய தேதிகளில் மல்லாவி பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தாலும்இ சஜீவனின் கொலையில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில்இ படுகொலைக்கு ஒரு வருடம் கடந்தபோதிலும் நீதி வழங்கப்படவில்லை என்பதை கண்டித்துஇ மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. ‘சஜீவனுக்கு நீதி வேண்டும்’ என கோசமிட்டு பதாதைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதுஇ ரவிகரன்இ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும் என்றும்இ நீதிக்காக அழுத்தம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில்இ பொலிஸ் அதிகாரி ஒருவர்இ சஜீவன் படுகொலை விவகாரம் தற்போது குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்இ விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதனையடுத்துஇ சஜீவனின் கொலையில் நீதி கோரிஇ மல்லாவி பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மூலம் மகஜர் ஒன்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

