யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் முதலாம் ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், தனது சகோதரியுடன் வசித்து வந்த வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது 56 வயதுடைய சகோதரி, நபர் கொல்லப்பட்டதற்கான சூழ்நிலையை விளக்கும் வகையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இரவு மூவர் வீட்டுக்குள் வந்து தண்ணீர் கேட்டதாகவும், தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றபோது அவர்கள் தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாகவும், அதிகாலை 3 மணியளவில் கட்டுக்களை அவிழ்த்தபின் தம்பி சடலமாகக் கிடந்ததைக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகங்கள் உள்ளதாகக் கருதும் பொலிஸார், சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

